தலித் மையக் கருத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படங்களை சமூக, அரசியல் பின்னணியுடன் அலசும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
இந்திய மொழிகளில், 33 படங்கள் பற்றி விரிவான தகவல்களைத் தருகிறது.முதல் கட்டுரை, தமிழ் சினிமாவில் தலித் பற்றிய சித்தரிப்பு குறித்து பேசுகிறது.
தொடர்ந்து, ஜாதி விபரங்கள், சமூகத்தில் பின்தங்கிய நிலை சித்தரிப்பு, கல்வி நிலையங்களில் நிலவும் பாரபட்சம், தலைவிரித்தாடும் ஜாதி மனப்பான்மை என பல விஷயங்கள் குறித்த விவாதக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, இந்தியாவில் வெளியான 33 திரைப்படங்களில் உள்ள தலித் மைய வாதம் குறித்த கருத்துகளை அலசுகிறது. கதையை விவரித்து, திரைப்படம் எழுப்பும் உரிமைக்குரல், சமத்துவப் பார்வையை கவனப்படுத்தும் நுால்.
– மதி