திருக்குறளில் காமத்துப் பாலை விரித்துக் கூறும் நுால். ஐங்குறுநுாறு, குறுந்தொகை போன்ற அக இலக்கியப் பாடல்களும் ஒப்புமையாக கூறப்பட்டுள்ளது.
‘நெஞ்சே என் காதலைக் காண இந்தக் கண்களையும் உடன் அழைத்துச் செல்’ என்பது ஒரு குறளுக்கு விளக்கம். கணவன் பிரிவிற்குப் பின் தனித்திருக்கும் பெண், மன உணர்வுகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தனக்குத் தானே பேசிக்கொள்கிறாள்.
மனம் நினைத்த இடத்திற்கெல்லாம் சென்று திரும்பி விடுகிறது. ஆனால் கண்கள்... அதனால் மனத்திடம் கண்களுக்கும் காதலன் இருக்கும் இடத்தைக் காட்டச் சொல்கிறாள் தலைவி. பழந்தமிழ் இலக்கியத்தில் உள்ள மெல்லிய உணர்வுகளை படம் பிடிக்கும் நுால்.
– மதி