முழுமுதற் கடவுளான விநாயகரைப் பற்றிய அரிய தகவல்கள் நிரம்பியுள்ள நுால் இது. எளிய தமிழ் நடை வடிவில், காரிய சித்தி சுலோகங்களையும் உள்ளடக்கியுள்ளது.
பிரபஞ்சத்தின் ஓசையும், பிரணவ மந்திரமான, ‘ஓம்’ என்பதற்கு, நம் முன்னோர் இறைவடிவம் கொடுத்துள்ளனர்; அது தான், விநாயகர் என அருமையாக விளக்கம் அளிக்கிறார் ஆசிரியர். அப்படியே விண்வெளி அறிவியலிலும் விநாயகரை காண செய்து ஆச்சரியமூட்டுவது பரவசம் தருகிறது.
நம் சூரிய குடும்பத்திற்கு அப்பால் ைஹட்ரஜன் மற்றும் ஈலியம் வாயுக்களால் நிரம்பிய, நெபுலா திரளை படத்துடன் காட்சிப்படுத்தி, விநாயகர் உருவத்தை காண்பித்து பிரமிப்பு ஏற்படுத்துவது வியப்பூட்டுகிறது.
விநாயகருக்கு உகந்த 21 மலர்கள், அபிேஷக பொருட்கள், இலைகள், நிவேதனப் பொருட்கள் பட்டியலும் இடம்பெற்றுள்ளது.
விநாயகரின் அறுபடை வீடுகள் என்னென்ன, விநாயகர் கோவில்களின் தலவரலாறு என, விநாயகர் பற்றிய விரிவான முழு தொகுப்பாக இந்த நுால் உள்ளது.
‘நம் கணேசன் என்ற கணேஷ் தான், கிரேக்கர்களும், ரோமானியர்களும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும், ‘ஜேனஷ்’ என்ற பெயரில் வழிபடப்படுகிறது. இவர்கள், முதலில் இந்த கடவுளை வணங்கிய பின் தான் மற்ற வேலைகளில் ஈடுபடுவர்’ என்பது உட்பட, விநாயகர் பற்றிய அரிய 108 தகவல்கள் இந்நுாலில் இடம்பெற்று உள்ளன.
ஆன்மிக அன்பர்களின் இல்லத்தில் இந்த நுால் இருக்கட்டும்; விநாயகரின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
– சி.கலாதம்பி