அகத்தியர் துவங்கி, சிவ வாக்கியர் உள்ளிட்ட, 60 சித்தர்களின் வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்துத் தரும் நுால். இயற்கையோடு வாழும் அற்புதமான சிறப்பு பண்புகளை அறிய வைக்கிறது.
பண்டைக்கால சித்தர்கள் முதல் இருபதாம் நுாற்றாண்டில் வாழ்ந்த சித்தர்கள் வரை நுாலில் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பழம்பெரும் சித்தர்களில் பலரும் யோக நெறிகளில் ஆழ்ந்து, மாபெரும் மன ஆற்றலால் சிறந்து விளங்கி, இயற்கை மருத்துவம் இரசவாதம் போன்றவற்றில் ஒப்பற்றவர்களாக விளங்கியதை எடுத்துக் காட்டுகிறது.
ஆன்மிக சொற்பொழிவுகள் நிகழ்த்திய கிருபானந்த வாரியார் வாழ்க்கையையும் தந்திருப்பது சிறப்பு.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு