சிரிக்க சிரிக்க படைக்கப்பட்டிருக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். எழுத்தின் வேகத்தில் சிரிப்பு மடை திறந்த வெள்ளமாக வருகிறது.
அது ஒரு கனாக்காலம், முதல் காதலை பேசுகிறது. அதில் வித்தியாசம் முதல் காதல் திருமணத்தில் முடிகிறது. காத்திருப்பு அதிர்ச்சி தரும் திருப்பங்கள். சின்ன வயசில் காதலியின் உள்பாவாடை திருடப்பட்டதும், முதிய வயதில் அதை கந்தல் துணி என்று குத்தி காட்டுவதும் நகைச்சுவை வர்ணனைகள்.
திரும்ப படிக்க துாண்டுகிறது மதுரை கல்பனா தியேட்டர் வர்ணனை சூப்பரோ சூப்பர். கடைசி கதை முதல் கதைக்கு எதிர் மாறாக உள்ளது. ரயிலில் வழி அனுப்புகிறாள் காதலி. அவனுக்கு முடிவான வழியனுப்பு ஆகிவிட்டது. பலவித கேரக்டர்களை படைத்து பொழுது போக வைக்கும் சிறுகதை நுால்.
– சீத்தலைச்சாத்தன்