சித்தர் வரலாறு பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டுள்ள நுால். சீர்திருத்த சிந்தனைகள், சாதி, சடங்கு மறுப்பாய் மிளிர்கிறது.
சிவவாக்கியர், அழுகணீயார், கடுவெளி, குதம்பை, பத்ரகிரி, பாம்பாட்டி, திருவள்ளுவர், சட்டைமுனி, இடைக்காடர், ஏகநாதர், வால்மீகி, சங்கிலி, திரிகோணர், கல்லுளியார், காரையார், பட்டினத்தார் என 34 சித்தர்களின் வாழ்க்கை குறிப்பு, பாடல்கள் விளக்கம் சிறப்பாக தரப்பட்டுள்ளன.
சிவவாக்கியரின் 550 பாடல்களும் சிறப்பானவை. சுழுமுனை நாடியை மூச்சு அடக்கி தலையில் ஏற்ற, இளமை வரும், உடல் பொன்னிறம் ஆகும் என்பதை சொல்கிறது. உலக வாழ்வின் மாயத்தையும், பகட்டு இல்லாமல் பக்தியையும், யோக முறைகளையும் மனதில் பதிய வைக்கிறது.
–- முனைவர் மா.கி.ரமணன்