பண்டைய காலத்தில் தமிழகப் பகுதியை ஆட்சி செய்த மன்னர்களிடம், போர்ப்படைத் தளபதியாக சிறப்பிடம் பெற்றவர்கள் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். இலக்கியம், செப்பேடு, கல்வெட்டு ஆதாரங்களை முன்வைத்து படைக்கப்பட்டுள்ளது.
இந்த நுாலில், 31 படைத்தளபதிகள் குறித்த விபரங்கள் தரப்பட்டுள்ளன. அக்காலத்தில் படையை நடத்திய திறன் குறித்த விபரங்களையும் வெளிப்படுத்துகிறது. மிக நுணுக்கமாக ஆராய்ந்து தகவல்கள் தரப்பட்டு உள்ளன. தளபதிகள் பற்றி குறிப்பிடும் போது போர் நிகழ்வுகளும் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளன.
தமிழக வரலாற்றை நுட்பமாக அணுகியுள்ளதை புத்தகம் வெளிப்படுத்துகிறது. படைத்தளபதியின் குடும்ப பின்னணியுடன் தரப்பட்டுள்ளது சிறப்பு சேர்க்கிறது. தமிழர் வீரத்தின் சிறப்பு குறித்த தொகுப்பு நுால்.
– மதி