சங்க இலக்கியங்களில் விரவிக் கிடக்கும் வேளாண்மை, பண்டமாற்று, ஏற்றுமதி வணிகம் போன்ற செய்திகளை தொகுத்து எளிய நடையில் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
அக்காலப் பேரரசர்கள் புலி போன்று வலிமை உடையவராய் விளங்கியதை, ‘பேழ்வாய் உழுவை ‘பொறிக்கும் ஆற்றலை’ என்ற புறநானுாற்று வரிகளில் அறியலாம். சிறுவர்களுக்குப் புலிப்பல் தாலி அணிவித்து வீரமூட்டியதை, ‘புலிப் பற்றாலி புன்தலைச் சிறார்’ என்ற பாடல் விளக்குகிறது.
மிளகு, ஏலம், சந்தனம், தந்தம் ஏற்றுமதி செய்து, வேலைப்பாடுள்ள கண்ணாடி, தங்கம், செம்பு மோதிரம் இறக்குமதி செய்ததை அகநானுாற்று வரிகள் விவரிக்கின்றன. பலாச்சுளையென பந்தி வைக்கப்பட்டுள்ள நுால்.
- புலவர் சு.மதியழகன்