தமிழ் கடவுள் முருகனின் சிறப்புகளை, எளிமையும், இனிமையும் நிறைந்த பாடல்களாக தரும் நுால். மனிதர்கள் துன்பங்களை நீக்கி, இன்பமாக வாழும் வழிமுறைகள் காட்டப்பட்டுள்ளன.
நோயற்ற வாழ்வும், மன நிம்மதியும் பெற அருணகிரிநாதர், ‘வேல் வகுப்பு’ என்ற படைப்பு வாயிலாக வழிகாட்டியுள்ளார். இதையே, ‘வேல் மாறல்’ என்ற தலைப்பில் மந்திரங்களாக்கி வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் அளித்து உள்ளார்.
கந்த புஷ்கரணி தீர்த்தம், குமார வயலுார் தடாகம் போன்றவற்றை வேல் உண்டாக்கிய தகவலும் உள்ளது. வேல் மாறல் மந்திரப் பாடல்களை பாராயணம் செய்தால் நன்மைகள் கிடைக்கும் என, முருகப் பக்தர்களுக்கு வழிகாட்டியுள்ள நுால்.
– முகில்குமரன்