குடும்பம் முதல் விஞ்ஞானம் வரை பல்வேறு வகையில் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
வெகு நாட்களாக பிரிந்து இருக்கும் கணவனிடம் குழந்தை ஒட்டிக் கொள்ள தாய் மேற்கொள்ளும் செயலை, உளவியல் ரீதியாக சாமர்த்தியமான விளக்கத்துடன் முன்வைக்கிறது, ‘நிலவும் மலரும்’ கதை.
சிறிய விஷயங்களையும் சரியாக உள்வாங்கி சிலந்தி வலை பின்னுவதை போல் பின்னப்பட்டிருப்பது தனித்துவமாக இருக்கிறது.
மணலில் சிக்கிக் கொள்ளும் பெண்ணுக்கு நடக்கும் விபரீதத்தை ’பொய் வழிச்சாலை’ சித்தரிக்கிறது. பாடம் கற்றுத் தரும் நுால்.
– ஊஞ்சல் பிரபு