ஏழை மக்களின் ஜீவனைச் சொல்லும் அற்புதமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். எப்படித்தான் இப்படி எல்லாம் சிந்திக்க முடிந்திருக்கிறது என்று எண்ணும் பொழுதே நெற்றியில் ஆச்சரியக்குறி விழுகிறது.
பெற்ற மகனிடமே குடியிருப்பதற்கு வீட்டு வாடகை கேட்கும் தாய் இருப்பாரா... நடையழகு தத்ரூபம். அந்த முரடனும் சில டீச்சர்களும்... உண்மையிலேயே அற்புதமான கருத்துப் புதையல். மையக் கருத்து உள்ளத்தை தொடுகிறது.
ஒரு ரவுடி, மகனை ரவுடி என்று சொல்வதை விரும்பவில்லை என்பதை அற்புதமாக எடுத்துக்காட்டி இருக்கிறார். கிராமம், குடி என பெரும்பாலான கதைகள் நடைமுறை உண்மையை சொல்கின்றன. பால் கொடுக்கும் தாய்மையின் பரிதவிப்பை அழகாக காட்டுகிறது. வாசித்து யோசிக்க வேண்டிய எழுத்துக்களின் தொகுப்பு நுால்.
– சீத்தலைச்சாத்தன்