சமூக நிகழ்வுகளை உள்வாங்கி வித்தியாசமான கோணத்தில் அனுபவங்களின் சாரமாக படைக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். சிறுகதை போன்று எளிய நடையில் அமைந்துள்ளது.
முகச்சுளிப்புடன் சமூகம் விலகிச் செல்வதை கவனமாக அவதானித்து எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு புள்ளியில் துவங்கி, சிறுகதை போல் நகர்ந்து எதிர்பாராத திருப்பத்துடன் முடிகிறது. மெல்லிய உரையாடல்கள் மனதில் ஈரம்படரச் செய்கின்றன; பெரும்பாலும் உரையாடல் பாணியிலே அமைந்துள்ளன.
சமுதாயத்தில் மிகவும் நெருக்கடியான நிலையில் வாழ்வோரை கண்முன் நிறுத்துகிறது. சீரான மொழி நடையில் உள்ளதால் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. சமூகத்தை கனிவுடன் நோக்கி, அதன் செயலில் கலந்து கிடைத்த அனுபவத்தை பதிவு செய்துள்ள கட்டுரை தொகுப்பு நுால்.
– மலர்