முகப்பு » கட்டுரைகள் » சந்தோஷ ராகங்கள்

சந்தோஷ ராகங்கள்

விலைரூ.100

ஆசிரியர் : கமலினி கதிர்

வெளியீடு: இனிய நந்தவனம் பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
குழந்தை வளர்ச்சியில் பெற்றோர் பங்கு பற்றிய சிந்தனையை வெளிப்படுத்தும் நுால். வயது வாரியாக பெற்றோர் பங்களிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கிறது. குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க, செய்ய வேண்டியவை குறித்து நேரடியாக அறிவுரைகளை தருகிறது. குழந்தைகளுடன் பழகும் போது, எதை செய்யலாம்; எதை செய்யக் கூடாது என்பதை வெளிப்படையாகவும் திட்டவட்டமாகவும் கூறுகிறது.

‘குழந்தைகளிடம் நற்பண்பு ஓங்கிட’ என்ற தலைப்பில் துவங்குகிறது. அடுத்து, இரண்டு மாதத்திலிருந்து ஆறு மாதம் வரை குழந்தைகளுக்கு செய்ய வேண்டியவற்றை தொகுத்து சொல்கிறது.

தொடர்ந்து ஆறு மாதம் முதல் 2 வயது வரை, அடுத்து 4 வயது வரையுள்ள பருவம், 6 முதல், 11 வயதுக்கு உட்பட்டோருடன் பழகும் விதம் பற்றி தகவல்களைக் கொண்டுள்ளது. குழந்தை வளர்ப்பு பற்றி வயது வாரியாக பிரித்து அறிவுரை தரும் நுால்.

மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us