தமிழில் டி.எம். ரகுராம்
தினம் தினம் நாம் சந்திக்கும் ஆயிரக்கணக்கான மனிதர்களின் வாழ்க்கையை எப்போதாவது நுணுக்கமாக அணுகி, ஒரு தியானமாக தரிசித்திருப்போமா? அடுத்தவர் சுக துக்கங்களை நம்முடையதாக எண்ணி, அவற்றின் அடிப்படையை ஆராய்ந்திருப்போமா?
சுகமோ துக்கமோ, எதிர்பார்ப்போ ஏமாற்றமோ - நம்மோடு பகிர்ந்துகொண்ட வரையில் அவை வெறும் அனுபவங்களாக மட்டுமே நிலைபெறுகின்றன. வைசாகனின் எழுத்தும் மொழியும் அவற்றை இலக்கியமாக மாற்றுகின்றது. மத்தியதர மக்களின் வாழ்க்கையை மிகவும் அழகான ஓவியமாகத் தீட்டியிருக்கிறார் வைசாகன்.