எல்லையற்ற பெருவெளியில் ஓங்காரத்தை அறிவதை உணர்த்தும் நுால். ஆத்மாவுக்குள் ஆனந்தமாய் இருக்கும் சிவத்தை, தியானத்தால் அறியும் முறைகளை சொல்கிறது.
பிரம்மம், சற்குரு, ஓங்காரம், மந்திரயோகம், நிலைத்த சந்தோஷம், சப்தத்தின் பேராற்றல், வெட்டவெளி, தியானம், திருப்தி, இல்லற, துறவற சாதனைகள் போன்ற தலைப்புகளில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
மெய்ஞ்ஞான விழிப்பு நிலைக்கு வழிகாட்டுகிறது. உலகாயுதத்துக்கு அறிவியல் பொருந்தும்; ஆன்மிகத்திற்குப் பொருந்தாது. சிவத்தை உணர முடியும்; நிரூபிக்க முடியாது என ஞானத்தை அள்ளித் தரும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்