பகவான் ராமகிருஷ்ணர், சீடருக்கு அருளிய அமுத மொழிகளின் தொகுப்பு நுால். வங்க மொழியிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டு மூன்று பாகங்களாக உள்ளது.
தோல்வியில் துவண்டிருந்த மகேந்திரநாத், பகவான் ராமகிருஷ்ணரை சந்திக்கும் வாய்ப்பு பெற்று சீடரானார். அடிக்கடி சந்தித்து அருளுரைகள் பெற்றதால் அவரது வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது.
அருளுரைகளை நாட்குறிப்புகளாக எழுதி விரிவாக்கினார். அதுவே பகவானின் அமுத மொழியாக தொகுக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள கருத்துகள், துயரம் போக்கும் அருமருந்தாக உள்ளன. லட்சியத்தை நிறைவு செய்ய உதவுகிறது. அமைதிக்கு வழிகாட்டுகிறது. துறவின் உண்மை நிலையை காட்டி வழிநடத்தும் குருவாக விளங்குகிறது. வாழ்வுக்கு உகந்த ஆன்மிக பெட்டக நுால்.
– மதி