நாட்டுப்புறத் தெய்வங்களின் வரலாறு மற்றும் வழிபாட்டு முறைகளை உரைக்கும் நுால். சிவகங்கை மண்ணின் வளமிக்க ஆன்மிகம் எளிய நடையில் தரப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் புகழ் பெற்ற நாட்டுப்புற தெய்வக் கோவில்கள், அமைந்துள்ள ஊர்கள், சுற்றுப் பகுதி வாழ்க்கை முறை சிறப்பு என, விரிவாக தகவல்கள் திரட்டி ஆராய்ந்து தரப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வுடன் இணைந்த சாமிகள், வழிபாட்டு முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
தெய்வங்களுக்கு உரிய வேண்டுதல், தொன்று தொட்டு கடைபிடிக்கப்படும் சடங்கு முறைகளையும் விளக்குகிறது. மக்களுக்கும், தெய்வங்களுக்கும் இடையில் உறவை எடுத்துக் காட்டுகிறது. கிராம பண்பாட்டு பாரம்பரிய சிறப்பியல்புகளை எடுத்துக்கூறும் நுால்.
– ராம்