வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் கட்டுரை தொகுப்பு நுால். தடைகள், தோல்விகள், அவமானங்கள் எத்தனை வந்தாலும், உறுதி என்ற திமிரை இழக்க வேண்டாம் என்கிறது.
கோபத்தை விட, மவுனம் வலிமையானது; அதனால் நிரந்தர பிரிவு ஏற்படும் என எச்சரிக்கிறது. மனம் விட்டு பேசினால் துாய்மை ஏற்படும். கோபம் ஏற்படுத்தும் விளைவுகளை, இழப்புகளை எடுத்துரைக்கிறது.
சோகம் பேசவிடாமல் தடுப்பதை கூறுகிறது. உயரிய குணம் கொண்ட நண்பரை உடன் வைத்திருப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. நிம்மதி இடங்களால் கிடைப்பதில்லை; மனதால் தீர்மானிக்கப்படு வதாகக் கூறுகிறது. வெற்றி பெற்ற அறிஞர்களை உதாரணமாகக் கூறி சுவாரசியம் ஊட்டுகிறது. சலித்துக் கொள்வோருக்கும் ஊக்கம் தரும் நுால்.
– டி.எஸ்.ராயன்