மூன்று நாவல்களின் தொகுப்பு நுால். ஒவ்வொன்றிலும் நிதானமும் அழகும் நிறைந்திருக்கிறது.
துணி மூட்டை வியாபாரிகள் குடும்பத்தை குறித்தும், இடம் பெயர்தலின் அவலத்தையும் பேசுகிறது, ‘மற்றும் சிலர்’ நாவல். சீரான அனுபவ பூர்வமான குரலை உயர்த்தாமல் கலைப்பாங்கு நடையும், ஒரு கணம் வரும் பாத்திரங்கள் கூட நினைவில் தங்கி வசீகரிக்கிறது.
இடம்பெயர்வு சார்ந்து தண்ணீர் பிரச்னை, இந்திய தேசியம் போன்ற விஷயங்களை காட்டுகிறது, ‘சுடுமணல்’ நாவல். தண்ணீர் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் போது தமிழர் படும் சிரமங்களை பதிவு செய்கிறது.
மதத்தை அரசியல்வாதிகள் லாபத்துக்கு பயன்படுத்தும் போக்கையும், அப்பாவிகள் பலியாவதையும் விவரிக்கிறது, ‘நகரம் 90’ நாவல். அனுபவங்களை காட்சி பூர்வமாக விவரிக்கும் நாவல்களின் தொகுப்பு நுால்.
– ஊஞ்சல் பிரபு