அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை சுவாரசியமாக பதிவு செய்துள்ள சிறுகதை நுால். குலதெய்வ கோவில் பற்றியும், எல்லாவற்றுக்கும் ஜோதிடரிடம் சென்று ஆலோசனை கேட்பவர்களுக்கு இறுதியில் ஏமாற்றம் மிஞ்சும் என்றும் கூறப்பட்டுள்ள முடிவு ரசிக்க வைக்கிறது.
சாக்கடையை சுத்தம் செய்யும் தொழிலாளிக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. செய்யும் பணி தற்கொலைக்கு சமமானது என்பதற்கான விளக்கம் தரப்பட்டுள்ளது. துாய்மை பணியாளர்களை சமமாக நடத்தவில்லை என்பதைக் கூறி தலைகுனிய வைக்கிறது.
தலைப்பாக வரும், ‘தகப்பன்சாமி’ கதை, தந்தை குடிகாரன் என்றாலும், மகள் கடவுளாகவே பார்க்கிறாள். அதிகம் படித்தோர் பெற்றோர் செய்யும் நல்லவற்றுக்கு கணக்கு பார்ப்பதாக இடித்துரைக்கும் சிறுகதை நுால்.
– முகில்குமரன்