கலை, இலக்கியம், அரசியல் என பலதுறைகளில் வெற்றிக்கொடி நாட்டியவர்களின் அனுபவ பதிவாக அமைந்த பேட்டிக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். விடா முயற்சியுடன் போராடி வெற்றி பெற்றவர்களின் கதைகள் பதிவாகியுள்ளன.
இந்த புத்தகத்தில், 24 கட்டுரைகள் உள்ளன. தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு பேட்டி முதலில் உள்ளது. கர்நாடக இசைப்பாடகி அருணா சாய்ராம், ஓவியர் மணியம் செல்வன், ஆன்மிக சொற்பொழிவாளர் சுதா சேஷய்யன் என பல்துறை வித்தகர்களுடனான உரையாடல் இடம் பெற்றுள்ளது.
கேள்வி – பதில் வடிவத்தில் கருத்துக்களை உள்வாங்கும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது. முன்னேற்றத்துக்கு நம்பிக்கையூட்டி, வழிகாட்டும் பேட்டிக் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
– ராம்