தலித் என்ற சொல்லை முன்வைத்து எழுதப்பட்டுள்ள நுால்.
மஹாராஷ்டிராவில் முதன்முதலாக இச்சொல்லை அறிமுகப்படுத்தியவர் பாபுராவ் புலே. எதிர்ப்புக்குரலாகவும், கலகக்குரலாகவும் எதிரொலிக்கத் துவங்கியது. தமிழில் தலித் இலக்கியம் அண்மையில் அதிக கவனம் பெற்று வந்துள்ளது. தலித்தியம், அதன் தோற்றம், தனித்தன்மை, வரையறை, பிற மாநிலங்களில் தலித் இலக்கியம், தலித் இலக்கிய வகைகள், தமிழில் தலித் படைப்பாளிகள் என வரலாற்றை விவரிக்கிறது.
விரிவாகவும், விளக்கமாகவும் நுட்பமாகவும் தலித் என்ற சொல்லாடல் குறித்து எடுத்துக் காட்டியுள்ளது. இலக்கியங்களில் ஆழ்ந்த கண்ணோட்டத்தை ஆழமான கருத்தியலோடு தந்துள்ளது. தலித் இலக்கியம் பற்றிய விரிவான புரிதலுக்கு வழிவகுக்கும் நுால்.
– ராம.குருநாதன்