முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள நுால்.
குறிப்பிட்ட மதம் அல்லது மார்க்கத்தை பரப்புவதாக இல்லாமல், வாழ்க்கை நெறியை வகுத்து வழிகாட்டுகிறது என திருக்குறளுக்கு உரை எழுதியதை உயர்வாக மதிப்பிடுகிறது. தகுந்த விளக்கமாக, ‘போதையில் மயங்கிக் கிடப்பவனை திருத்த முயற்சிப்பது, நீரில் மூழ்கிய பொருளை, தீப்பந்தத்தால் தேடுவது போன்ற நிலை’ என, வள்ளுவர் வாக்கை எடுத்துச் சொல்கிறது.
சொல்லும், காட்சியும் நெஞ்சுக்குள் நிலைக்கிறது. ஒழுக்கமாக வாழ்வதுதான் உயர்குடிப்பிறப்பு என்ற உரை அற்புதம். தன் குற்றத்தைக் கண்டால், புறங்கூறும் பழக்கம் தானாக போய்விடும் என்கிறது. அருமையான நுால்.
– சீத்தலைச் சாத்தன்