சுவாமி ஓங்காரநந்தாவின், 800 நல்லுரைகள் அடங்கிய தொகுப்பு நுால்.
கருடன் பறக்கும்போது தான் வணங்க வேண்டும் என்பதற்கு உரிய தத்துவம் விளக்கப்பட்டுள்ளது. பேதமற்ற அன்பிற்கு ராதா-கிருஷ்ணன், ஐக்கியத்திற்கு பார்வதி- பரமேஸ்வரன், உயர்ந்த உறவுக்கு கணவன்-, மனைவி என கூறுகிறது. ஆனந்தம் மிக்க அமைதியோடு வாழ்வதற்கும், உயர்வதற்கும் ஒரே புகலிடம் சனாதன தர்மம் என வழிகாட்டுகிறது.
பத்து வகை தியானம், அஷ்டபந்தன மருந்து பற்றி விளக்கம் தருகிறது. ‘ஒரு கைப்பிடி சாதம்தான் உயிரைத் தாங்கும்’ என உண்மை கூறி சிந்திக்க வைக்கிறது. வீட்டில் ஐந்தறை பெட்டியை பயன்படுத்தினால், 100 வயது வாழலாம் என்கிறது. இறுதியில் சிவபுராணமும் தரப்பட்டுள்ளது. படிக்க உகந்த நுால்.
முனைவர் கலியன் சம்பத்து