முகப்பு » கதைகள் » பார்த்திராத முகங்கள்

பார்த்திராத முகங்கள்

விலைரூ.80

ஆசிரியர் : பி.கே.இராமச்சந்திரன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வெவ்வேறு நிகழ்வு களங்களில் உருவான, 19 சிறுகதைகளின் தொகுப்பு நுால். சிந்தனைக்கும், பொழுதுபோக்கவும் ஏற்றது.

புத்தகத் தலைப்பாக அமைந்துள்ள, ‘பார்த்திராத முகங்கள்’ கதை விபரீத ஆசையை சொல்கிறது. மலையளவு வளர்ந்த வைதேகியின் சினிமா ஆசை எப்படி சரிந்தது; அது சாஸ்திரிக்கே வெளிச்சம். பார்த்த முகங்களையே பார்த்துக் கொண்டிருப்பது அலுப்பு தரும். பயணம் புறப்பட்டு முடிவில் பார்க்கும் முகம் வியப்பு தரும் என்பதை ‘பயணம்’ கதை சொல்கிறது.

அண்ணன், தம்பி உறவை விவரிக்கிறது ‘சடங்கு’ கதை; ஏமாற்றியவனும், ஏமாந்தவனும் பற்றி அழகு நடையுடன் உள்ளது. பிடித்தமானவனை மணம் முடிக்க ஒரு பெண் எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதை, ‘மனமும் மணமும்’ சிறுகதை அற்புதமாக சொல்கிறது.

– சீத்தலைச் சாத்தன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us