ஆசிரியர் : முனைவர் பஜீலா ஆசாத்
வெளியீடு : மணிமேகலை பிரசுரம்
அலைபேசி : 91764 51934
பக்கம் : 160
விலை :
மனிதர்களின் உள்ளம், எண்ணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மிக நுணுக்கமாக அலசி ஆராயப்பட்ட, 22 கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு தலைப்பும், கருத்தும் பிரமிப்பை தருகின்றன.
சீன மூங்கில் விதைத்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சிய பின் தான் முளைப்பு எட்டிப் பார்க்கும்; ஒவ்வொரு வாரமும், 80 அடி உயரம் வளரும். அதாவது நிலத்தில் வேர்களை பலப்படுத்த நீண்ட காலம் எடுத்துக் கொள்கிறது.
அதுபோல பொறுமையுடன் காத்திருந்தால் மகிழ்ச்சி நிச்சயம் என்ற கருத்து பலப்படுத்துகிறது. எவருமே பிரச்னைகளை விரும்புவதில்லை. ஆனால், மகிழ்ச்சியை எங்கே தேடுகின்றனர் என்பதில் தான் வித்தியாசம் ஏற்படுவதை குறிப்பிடுகிறது. திரும்ப திரும்ப படிக்க வேண்டிய புத்தகம்.
– சீத்தலைச்சாத்தன்