ஆங்கிலேயர் வந்த பிறகுதான் இந்தியாவில் கல்வி வளர்ச்சி பெற்றது; பொருளாதாரம் சீரானது; அறிவியல் அறிவு கிடைத்தது என்பது, எந்தளவு மறைக்கப்பட்ட உண்மை என்பதை தெளிவாக்கும் நுால்.
பாரம்பரியக் கல்வியின் வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்பட்டிருக்கிறது என்பதை உரைக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கலப்பை, ஐஸ் தயாரிக்கும் முறை, எக்கு தயாரிப்பு, கட்டட கட்டும் முறை, தொழில்துறைகளில் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்கள் பற்றி விவரிக்கிறது.
பண்டைய இந்தியாவில் சிறந்து விளங்கியது வான சாஸ்திரம். சூரிய சந்திர நகர்வுகள், கிரகணங்களை துல்லியமாகக் கணிப்பதில் ஆரம்பித்து பெரு மதிப்பைப் பெற்றிருந்ததை விளக்கும் நுால்.
– இளங்கோவன்