தமிழக அரசின் விடுப்பு விதிகளையும், பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளையும் விவரித்துள்ள நுால்.
சொல் அகராதியோடு துவங்குகிறது. பணியாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு எப்படி கணக்கில் கொள்ளப்படுகிறது என்பதை விளக்குகிறது. பல்வேறு பிரிவு பணியாளர்கள் எப்படி ஈட்டிய விடுப்பு மற்றும் ஈட்டா விடுப்புகளை பெறலாம் என விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
விடுப்பு காலம் முடியும் முன் பணிக்குத் திரும்ப விரும்பினால், விடுப்பு வழங்கிய அலுவலர் அனுமதித்தால், சேர மட்டுமே முடியும் என்ற தகவல் உள்ளது. விடுப்பின் வகை, பிரிவுகள், வரைமுறைகள் என்று கணக்கற்ற செய்திகள் காணப்படுகின்றன. விடுப்புக்கான நடைமுறையை வழிகாட்டும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்