மொய் என்ற அன்பளிப்பு வசூலை மையமாக வைத்து மலை கிராமங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து படைத்திருக்கும் நாவல் நுால்.
வசதி மிக்கவன் செய்த மொய்யை, வறுமையில் உள்ளவனும் திருப்பி செய்ய வேண்டும். குடும்பவிசேஷத்திற்கு ஒருவன் மொய் செய்திருந்தால், அவன் குடும்பத்தில் நான்கு விசேஷங்கள் நடந்தாலும் திரும்ப செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அலசுகிறது.
பொழுதுபோக்க மட்டுமல்ல; சமுதாயத்திற்கு சாட்டை அடியும் கொடுத்து உள்ளது. ஒரு பெண், அடுத்த ஜாதிக்காரனுக்கு உடம்பை கொடுத்தால் தப்பு என்று சொல்லும்வெறி பற்றி பேசப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் போர்வையில் நடத்தும் தவறுகளையும் சுட்டிக்காட்டும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்