திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள உவமை, இலக்கிய நயம், விளக்கங்களை எல்லாரும் ஏற்கும் வகையில் தரும் நுால்.
கைகேயி, சீதை, சூர்ப்பனகையால் ராமாயணமும், திரவுபதியால் மகாபாரதமும், ஆவதும் அழிவதும் பெண்ணாலே என்பதைக் காட்டுவதாக குறிப்புரையில் கூறப்பட்டுள்ளது. முன்னுரையும், பின்னே குறளும், முடிவில் தெளிவுரையும் தந்துள்ளதால் எளிதில் மனதில் பதிகிறது.
காதல் காவடியை காட்டுகிறார் வள்ளுவர். இதில் காமம் ஒரு பக்கமும், வெட்கம் ஒரு பக்கமும் தொங்குகிறது. காதலி விதையற்ற கனி போன்றவர். ஒரு தலைக்காதல் துயரம். இரு பக்கம் சமமான காவடியே இன்பம் என்கிறது. இன்பத்துப்பாலை சுவையுடன் பருக தரும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்