இணையத்தில் நடத்தப்பட்ட ஆயிரம் மணி நேர புத்தக வாசிப்பு மாரத்தானில் கலந்து கொண்டு வென்றவரின் அனுபவப் பதிவு நுால்.
வாசிக்கும் நேரத்தை நிமிடக் கணக்கில் துல்லியமாக கணக்கிட்டு, ‘கூகுள் ஷீட்’டில் பதிவேற்றும் வழிமுறை சவாலை சுவாரசியம் ஆக்குகிறது. வாசிக்கும் காலத்தில் பேத்தியை வளர்க்கும் பொறுப்பையும், முதுமையின் சவால்களையும், புத்தக சேகரிப்பில் சிரமங்களையும் பகிர்கிறது.
வாசிப்புக்காக வகுத்துக்கொண்ட விதம், நேரடி உரையாடல் போல் விவரிக்கும் பாங்கு ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. அதிகாலை 4:00 மணிக்கு எழுவதும், தேவையற்றவற்றை கவனத்துடன் நிராகரித்திருப்பதும் பிரமிக்கச் செய்கிறது. சிறந்தவற்றை வாசித்து முடிக்க ஆயுள் போதாது என்று கூறும் நுால்.
– ஊஞ்சல் பிரபு