பனை தொழிலாளியின் வாழ்வை மையமாக்கி எழுதப்பட்டுள்ள நாவல்.
பனை மரத்தை நம்பி வாழ்வை நகர்த்துவோர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், துயரங்களையும் தெளிவாக பேசுகிறது. படிப்பறிவு இல்லாததால், உடல் உழைப்பை நம்பி வாழ்வை நகர்த்தும் பாத்திரம் சுயம்பு. அவருக்கு ஈடாக உழைக்கும் பாத்திரமான பத்ரகாளியை மையமாக்கி நகர்கிறது. சமூக ஏற்றத்தாழ்வை படம் பிடித்துக் காட்டுகிறது.
உழைப்பால் ஆணுக்குப் பெண் நிகர் என்பதை உணர்த்துகிறது. தீட்டு, தீண்டாமை எளிய மனிதர் வாழ்வை சிதைப்பதை பாசாங்கு இன்றி விவரிக்கிறது. புனிதத்தை நயமுடன் சொல்கிறது. பனை குறித்த நுணுக்கமான தகவல்கள் நாவலின் ஊடாக சொல்லப்பட்டிருப்பது சிறப்பு. பனை சார்ந்த வாழ்வை முன்வைத்து சரியான கோணத்தில் படைக்கப்பட்டுள்ள நாவல்.
– ஊஞ்சல் பிரபு