மாணிக்கவாசகரின் பன்முகச்சிந்தனைகளை ஆழ்ந்து படித்து ஆய்வு செய்திருக்கும் நுால்.
அறிமுகப்பகுதி, மாணிக்கவாசகரின் வரலாறு சுருக்கமாகவும், செறிவாகவும் அமைந்துள்ளது. பக்தி நிலை ஒருபுறம், படைப்பு நிலை ஒருபுறம் என்ற அடிப்படையில் விரிகிறது. இறையனுபவத்தை, முயற்சி அனுபவம், எழுச்சி அனுபவம் என்ற நிலைகளில் நுட்பமாகவும் ஆராய்ந்துள்ளமை போற்றத்தக்கது.
சொல்லடைவு, தொடரடைவு பட்டியலாகத் தரப்பட்டுள்ளன. சிவபுராணச் செய்திகள் விரிவாகவும் தெளிவாகவும் உணர்த்தப்பட்டுள்ளன. திருப்பாதப் பெருமை, திருநீற்றுப் பெருமை, திருவைந்தெழுத்து மந்திரம் விளங்க உரைக்கிறது. பக்தி இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபடுவோருக்கு பயனளிக்கும் விதத்தில் அமைந்துள்ள நுால்.
– ராம.குருநாதன்