சிறுவர்களின் சிந்தனையை வளர்க்க உதவும் கதைகளின் தொகுப்பு நுால்.
ஒவ்வொன்றுக்கும் உல்டாவாக இரண்டு கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு கதையை படி எடுத்தது போல இன்னொன்று இருந்தால் அதை உல்டா என்கிறோம். பொதுவாக ஒவ்வொரு கதையிலும் போதிய நிகழ்ச்சிகளும், பாத்திரங்களும் இடம்பெற்றிருக்கும். உல்டா கதையில் நிகழ்ச்சி அப்படியே இருக்கும்; பாத்திரங்கள் மட்டும் மாறி இருக்கும் அல்லது பாத்திரங்கள் அப்படியே இருக்கும் நிகழ்ச்சி மாறி அமையும்.
பாத்திரம், நிகழ்வுகளை மாற்றியமைத்து கற்பனை வளத்தோடு புதிய கதைகள் படைப்பதற்கு ஏதுவாக வழிகாட்டுகிறது. சூழ்ச்சியை மதியால் வெல்வது போன்ற அறிவார்ந்த நீதிநெறிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. சிறுவர் படைப்பாற்றலை வளர்க்க உதவும் நுால்.
--– புலவர் சு.மதியழகன்