கீதை சுலோகங்களின் பொருளை எளிமையாக விளக்கும் நுால். ஆதிசங்கரர், மத்வாசாரியார், ராகவேந்திரர், ஞானதேவர் விளக்கங்களை முப்பரிமாணத்தில் காட்டுகிறது.
மனக்குழப்பம், மனத்துயரில் இருக்கும் அர்ச்சுனன் நிலையும், பகவான் கூறும் தீர்வும் முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது. மனதாலும், வாக்காலும், உடலாலும் உய்வடையும் வழிகளை நினைப்பதும், சொல்வதும், செய்வதும் யோகம் என விளக்குகிறது. அடிக்குறிப்புகள் சிறப்பாக அமைந்துள்ளன.
ஆபத்தில் ஆமை ஐந்து உறுப்புகளையும் உள்ளிழுத்துக் கொள்வது போல், ஞானம் உள்ளவன் ஐம்புலன்களையும் அடக்கி, பாவம் செய்யாமல் காப்பான் என்கிறது. ஞான வழிகாட்டும் எளிய இனிய விளக்க நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்