புராணங்களில் சாப விமோசனங்களை எடுத்துரைக்கும் நுால். பாதிக்கப்பட்டோரின் கஷ்டம், அதிலிருந்து மீளச் செய்த பரிகாரங்களை தொகுத்து தருகிறது.
பணம், நிறம், ஒட்டுக் கேட்டல் போன்றவற்றில் ஏற்படும் தகராறால் சாபம் கொடுக்கப்படுகிறது. விக்கிரமாதித்தன் கதையில் வரும் கதாபாத்திரம் வேதாளம். அது பெற்ற சாபம் பற்றி சுவையான தகவல் உள்ளது.
சிவப்பு நிற அழகு தந்த கர்வம் காரணமாக சாபம் பெற்று, அன்னை மகாலட்சுமி பூலோகத்துக்கு வந்ததை எடுத்து சொல்கிறது. சாபத்தின் விளைவால் பூமிக்கு வந்திருக்கிறோம் என எண்ண வைக்கிறது. அந்த வகையில், 30 வகை சாபங்களை பெற்றவர்கள், அவற்றில் இருந்து மீளச் செய்ய வேண்டிய பரிகாரங்களை சொல்லும் நுால்.
-– தி.செல்லப்பா