வாழ்த்த வாயும், நினைக்க நெஞ்சும், தாழ்த்த சென்னியும் தந்த தலைவன் என இறை அருளை போற்றும் நுால். சித்தர்களின் சிந்தனைக் கருவூலமாக மலர்ந்து உள்ளது.
சித்தர் பாடல்கள் பற்றி 15 கட்டுரைகள் தெளிவான விபரங்கள் சொல்கின்றன. திருமூலர் குறிப்பிட்ட, ‘தன்னை அறிவதே அறிவாம்’ என்ற கருத்துக்கு ஒப்பானது இல்லை என சிறப்பிக்கிறது. கிறிஸ்துவ சமயத்தில் மிஷ்டிக், இஸ்லாமிய மதத்தில் சூபி ஞானியர், புத்த மதத்தில் தாவோ போன்ற அறிவு மரபுகள் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
மழையும், செல்வமும் சுக்கிரனின் பிரசாதங்கள், எள்ளுக்குள் எண்ணெய் போல எங்கும் நிறைந்திருப்பான் இறைவன் என்பதை புரிய வைக்கிறது. ஆழ்ந்து சிந்திக்க உகந்த கருத்துக் களஞ்சியம்.
– சீத்தலைச் சாத்தன்