நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையின் தல வரலாறும் சிறப்புகளும் ரத்தின சுருக்கமாக சொல்லப்பட்டுள்ள நுால். கிரிவலம் செல்வோர் எங்கு துவங்கி எப்படி செல்ல வேண்டும் என்று வழிகாட்டுகிறது.
கோவிலின் அமைப்பு சிறப்பாக உரைக்கப்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்களைப் பற்றிய விளக்கக் குறிப்புகள் பக்தர்களுக்கு மகிழ்வையும் நெகிழ்வையும் ஏற்படுத்தும். மகான் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, விசிறி சாமியார் மற்றும் சித்தர்களைப் பற்றிய தகவல்கள் உள்ளன.
அருணாச்சலத்தை சுற்றியுள்ள இடங்கள் பற்றியும், கிரிவலம் வரும்போது மழை வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்