பணம் மனிதர்களிடையே ஏற்படுத்தும் தடுமாற்றத்தை கதை மாந்தர்கள் வாயிலாக சித்தரிக்கும் நாவல். எங்கும் பணமோகம் தலைவிரித்தாடுவதாக தெரிவிக்கிறது.
வங்கி மேலாளர், சேர்ந்தாற் போல் மூன்று நான்கு நாட்கள் வரும் விடுமுறைக்கு முன் கோடிக்கணக்கான ரூபாயை எடுக்கிறார். சூதாட்டம் மற்றும் வட்டிக்கு விட்டு லாபம் பெற்று அடுத்த வேலைநாளில் பணத்தை வைக்கிறார்.
இது போன்ற ஊழலால் ஏற்பட்ட சிக்கல்கள், நெருங்கிய நண்பர்களை ஏமாற்றுதல், குடும்பத்தில் குழப்பம் என விறுவிறுப்புடன் உள்ளது. உறவினரிடையே விரிசலை உண்டாக்கி, கொலை, கொள்ளை, தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் பெருக காரணமாவதை விவரிக்கிறது. சீரழிவுகளைத் தடுத்து நிறுத்த முனையும் நாவல்.
--– புலவர் சு.மதியழகன்