நல்ல தமிழ் பெயர் கதாபாத்திரங்கள்உடைய நாவல் நுால். அமைதி, வளன், நிலா, வாசமலர், தென்றல், கரும்பு என்ற பெயர்கள் உள்ளன.
பெண் பார்க்கப் போகும்போது, பெண் தலையில் பூவைப் பார்த்து, குடும்பத்தை எடை போடுவர் என்று பூக்காரி சொல்வது குறும்பு அல்ல; உண்மையை இயம்புவதாக உள்ளது. ஒரே குடும்பத்தில் பிறந்த இரண்டு பெண்களை ஒரே சமயத்தில் பெண் பார்த்தால் ஒருவரை பிடிக்கவில்லை என்று சொல்ல நேரிடும். அப்போதைய பெண் மனம் உளவியல் ரீதியாக சொல்லப்பட்டுள்ளது.
மாணவர்கள் யார் மாதிரி வரவேண்டும் என்று விரும்புவது நல்ல விஷயம். விஞ்ஞானி அப்துல் கலாம், அன்னை தெரசா, நம்மாழ்வார் பணிகள் பற்றியும் பேசப்பட்டுள்ளது. மத்திய கிழக்கை நேரில் பார்ப்பது போல் வர்ணனைகள் உள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்