தெலுங்கில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
தாய், மகன் பாசத்தையும், மனைவி வழியாக தாய் குணத்தை பார்த்ததையும், ‘அம்மாவின் அறை’ கதை பகிர்கிறது. மகனை பார்க்க அமெரிக்கா செல்லும் தந்தை, அங்கு கிடைத்த அனுபவத்தையும், ஊர் திரும்பிய பின், மகன் கடிதத்துக்கு பதில் தரும், ‘அர்த்தமுள்ள வாழ்க்கை’ உணர்வுகளுடன் பிணைந்துள்ளது.
அறிவியல் பூர்வமான சிந்தனையுடன் அடியெடுத்து வைத்தால், மாற்றம் எளிதில் நிகழும் என்பதை, ‘படைப்புத் தொழில்’ கதை உணர வைக்கிறது.
பூமியின் துயரம், உள்ளே வெற்றிடம், தவம், பூமியின் புண் போன்ற கதைகள் அன்றாடம் வாழ்வு நிகழ்வுடன் பொருந்துகின்றன. நேர்மை வாழ்வே மகிழ்ச்சி தரும் என உரைக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்