திருமந்திர பாடல்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து தெளிவாக விளக்கிச் சொல்லும் நுால். ஒவ்வொரு கருத்தும் உள்ளத்துாய்மைக்கு உதவுகிறது.
யாக்கை, உயிர், இளமை, செல்வம் நிலையாமை, புலால் மறுத்தல், அன்புடைமை, நடுவுநிலைமை போன்ற நெறிகளை வலியுறுத்தும் பாடல்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் நெறிகளை விவரித்து புரிதலைத் தருகிறது.
மெய் உணர்வுக்கு வழி காட்டுகிறது. உடல் தத்துவங்களையும், உளவியல் கோட்பாடுகளையும் ஒருங்கே தருவதாக அமைந்திருப்பதை விளங்க வைக்கிறது. தத்துவக் கருத்துக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை. விளக்கங்கள் எளிய நடையில் தரப்பட்டுள்ளன. உள்ளத்தை துாய்மையாக்க படிக்க வேண்டிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு