அமெரிக்க எழுத்தாளரின் மிகச்சிறந்த நாவல் நுால். தமிழில் மொழியாக்கம் பெற்று மறுபதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகம் போற்றும் புலிட்சர் மற்றும் நோபல் பரிசுகளை வென்று உள்ளது. தனித்துவமிக்க கதாபாத்திரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. மிகக்குறைந்த சொற்களை பயன்படுத்தி தெளிவான நடையில் சொல்லப்பட்டுள்ளது.
கடலில் மீன்பிடிக்க செல்லும் போது, சுறாக்களுடன் நடத்தும் போராட்டம் பற்றியது தான் கதை. கடல் வாழ் அனுபவத்தை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ளது. விடாமுயற்சியால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துரைக்கிறது. உலகம் முழுதும் வாசகர்களால் விரும்பி வரவேற்கப்பட்டது. எளிதாக வாசிக்கும் நடையில் அமைந்த நாவல் நுால்.
– ஒளி