ஆசிரியர்: கனலி
வெளியீடு: ஹெர் ஸ்டோரீஸ்
அலைபேசி: 75500 98666
ஆண், பெண் பாகுபாட்டால் சமச்சீர் குலைவை விவாதமாக்கியுள்ள நுால். வழிபாடு, பொதுவெளியை பயன்படுத்துவதில் உள்ள தடைகளை உடைத்து முன்னேறுவதற்கு வழி அமைக்கும் கருத்துகளை உடையது.
இதில், 21 கட்டுரைகள் உள்ளன. சமூகத்தை நெகிழ்வுக்கு உள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளன. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பொது வெளியில் பெண்களுக்கு ஏற்படும் அவமரியாதையை சுட்டிக்காட்டி விவாதிக்கிறது.
ஆடை சுதந்திரம், பெண்ணடிமைத் தனம், விளம்பரங்களில் பாரபட்சம் என பல்வேறு வகையில் விவாதப் பொருட்களை மையப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையை புரிய வைப்பது, மேம்பாட்டுக்கு துணை நிற்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது, சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரத் தொழிலாளர்களை மரியாதையுடன் நடத்துவதை வலியுறுத்தும் நுால்.
– மதி