வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அழகாக இலக்கியத் தரத்துடன் படங்களுடன் நாவல் போல எழுதப்பட்டுள்ள நுால். மாணவப் பருவத்தில் சினிமா தியேட்டரில் வாங்கிய அடி, தெரு நாடகத்தில் கிடைத்த முத்தம், வீட்டில் திருடியதால் வந்த பெல்ட் அடி என சுவாரசியம் குன்றாமல் உள்ளது.
பகலில் தச்சு வேலை, இரவில் கதை எழுதுவது என்று வாழ்வை செதுக்கிக் கொண்டு முன்னேறியதை வடித்து காட்டுகிறது. பசி, பட்டினி, துாக்கம், நோயைத் தாண்டி கடுமையாக உழைத்து சிறுகதை தொகுப்பை வெளியிட்டதை குறிப்பிடுகிறது.
தச்சுப் பணியோடு அச்சுப் பணியும் வளர்ந்து சிறப்பாக படைத்த நுால்கள் பற்றிய விபரங்கள் பதிவாகியுள்ளன. வாழ்வுப் போராட்டத்தின் நிகழ்வுகளை செதுக்கி சிற்பமாக்கியுள்ள நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்