தமிழர்களின் இறைவழிபாட்டு நடைமுறைகளை விளக்கமாக சொல்லும் நுால். தமிழர் சமயநெறியில் துவங்கி, 14 தலைப்புகளில் தகவல்களை தருகிறது. வழிபாட்டின் அடிப்படைகளை உரைக்கிறது.
குல தெய்வம், சிறு தெய்வ வழிபாடு, சைவ சமயம், திருமால், கொற்றவை, இந்திரன், வருணன், விநாயகர், முருகன் வழிபாட்டு சிறப்புகளை சுருக்கமாக தெரிவிக்கிறது. பவுத்த சமயம் குறித்தும் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பக்தி இலக்கியங்கள் குறித்து தனித்தலைப்பில் விபரங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நிலவும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள வழிபாட்டு மரபுகளுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. தமிழர் வழிபாட்டின் பன்முகத்தை விவரிக்கும் நுால்.
– ஒளி