காட்டில் வாழும் உயிரினங்களையும், பணிபுரியும் ஊழியர்களையும் புரிந்து கொள்ளும் வகையில் சிறுகதை போல் உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். காடு பற்றி தெளிவான சிந்தனையை ஏற்படுத்துகிறது.
விலங்குகளையே கதாபாத்திரங்களாக்கி, தன் வரலாற்றை சொல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கம், புலி, கரடி, குரங்கு, யானை என, அறிந்த உயிரினங்கள் பற்றி தெரிந்திராத தகவல்களை தருகிறது.
விலங்குகளும், பறவைகளும் காட்டில் எப்படி வாழ்கின்றன என்பதை தெளிவு படுத்துகிறது. கானமயில், கூழைக்கடா, நீர்நாய் போன்ற அபூர்வ உயிரின வாழ்க்கைமுறை பற்றிய வினோத தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. விலங்கினம், பறவையினங்களின் வாழ்விடத்தை படம்பிடித்து காட்டி விழிப்புணர்வு ஊட்டும் எளிய நடையில் அமைந்த நுால்.
– ஒளி