புதுவையில் வாழ்ந்த தேச பக்தர்கள் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். மூன்று முக்கிய தலைப்புகளில் அமைந்துள்ளது. முதலில் பாரதியார் குறித்த நினைவுக்குறிப்புகள், 18 தலைப்புகளில் அமைந்துள்ளன. அந்த கால சம்பவங்கள் எளிய நடையில் காட்சிகளாக விவரிக்கப்பட்டுள்ளன. தகவல்கள் சுவாரசியம் தருகின்றன. தேச விடுதலையில் பாரதி கொண்டிருந்த ஈடுபாட்டை கண்முன் காட்டுகிறது.
தொடர்ந்து வ.வெ.சு.ஐயர் பற்றிய நினைவுக் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதுவும் மூன்று தலைப்புகளில் உள்ளன. அனுபவங்களில் உள்வாங்கிய செய்திகள் மிக நுட்பமாக பதிவாகியுள்ளன. அடுத்து, ஸ்ரீ அரவிந்தர் பற்றி நினைவுகள் இடம் பெற்றுள்ளன. தேசப்பற்றை வளர்க்கும் நுால்.
– ராம்