எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள், பாமரருக்கும் அருள்புரிய பற்பல வடிவம் எடுத்துள்ளதை தெரிவிக்கும் ஓவிய நுால். திருக்கோவில்களில் எழுந்தருளி உள்ள தெய்வத்திருமேனிகளை எழில் ஓவியங்களாக்கி மனதில் பதிய வைக்கிறது.
இறைவனின் வடிவை பார்த்து தியானிக்கும் வகையில் வரையப்பட்டுள்ளன. அடி, முடி காண இயலாத அருட்பெருஞ்சோதி, சிற்பச் சுடராகி, ஓவிய மலராகி, துாரிகைக்குள் துளிராகி, கண்ணுக்குள் கருவாக வருவதை காட்டுகிறது. ஓவியங்கள், உரிய விளக்கங்களோடு உள்ளன. தெய்வங்கள் தோன்றிய வரலாற்று தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஓவிய வடிவங்களில் தெய்வாம்சங்களை விளக்கும் வகையிலான நுால்.
– இளங்கோவன்