நெல்லை வட்டாரத்தின் மண் மணக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
நெல்லை வட்டார பேச்சில், ‘எல, எவம்ல’ போன்ற சொற்களுடன், பள்ளியில் பாடம் நடத்துவதை, ‘இங்கிலீஷ் படுத்தும் பாடு’ கதை சுவாரசியமாக ஊட்டுகிறது. இலங்கை வானொலி செய்தி வாசிப்பாளர்களின் உச்சரிப்பு, சினிமா பாடல்கள், வீடுகளில் மணம் வீசியதை கூறுகிறது.
திரையரங்கு கொண்டாட்டத்தை, ‘நெல்லை டாக்கீஸ்’ ரசனையுடன் விவரிக்கிறது. எம்.ஜி.ஆர்., ரசிகரின் குணாதிசயங்களை, ‘செல்லப்பா மாமா’ சொல்லி நெகிழ வைக்கிறது. மண்ணின் கலாசாரம், குடும்ப சிக்கல்களை பிரதிபலிக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்